BREAKING NEWS

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! ஒருவர் உயிரிழப்பு.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! ஒருவர் உயிரிழப்பு.

திண்டுக்கல்லில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கமன்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.  இது குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக  செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்தனர். இதனையடுத்து அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்பதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தியணைப்பு துறையினர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து தற்போது பட்டாசு கடையின் உள்ளே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் அருகே பட்டாசு கடை இருந்ததால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்களும் உயிருக்கு பயந்து வெளியே ஓடினர்.

மேலும் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இந்த பட்டாசு கடை விபத்தில் அங்கு பணியாற்றிய  நபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  மேலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது முழுமையாக அணைக்கப்பட்ட பின்புதான் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )