BREAKING NEWS

பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது.

பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார்.

இந்த நாணய கண்காட்சியினை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தாமரை ராஜ் என்ற இளைஞர் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. அவர் கண்காட்சியில் பார்வையாளர்கள் இடம் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்தார்.

இந்த கண்காட்சியில் இந்தியா, பங்களாதேஷ், நைஜீரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், பணத்தாள், அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை, பத்திரம், சோடா மூடி, தீப்பெட்டிகள் போன்றவைகள் இடம் பெற்றிருந்தன. பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )