BREAKING NEWS

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்கும் திட்ட பணி துவக்க விழா நடைபெற்றது. 

மத்திய அரசின் 15-வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பவானி ஆற்றில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் திட்ட பணிகளை பவானி எம்.எல்.ஏ. கருப்பண்ணன் பூமி பூஜை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சேரி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சேரி ஒருசேரி புதூர் காட்டூர் கல்லியூர் மல்லியூர் பாக்காஊர் என குக் கிராமத்தில் உள்ள 7000 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

அதேபோல் தொட்டிபாளையம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள திப்பி செட்டிபாளையம், சேர்வராயன் பாளையம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம், தாளபையனூர், செம்மன்குலி, பனங்காட்டூர் காலனி போன்ற கிராம பகுதியில் வசிக்கும் 7000 கிராம பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்த குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒரிச்சேரி புதூர் பஞ்சாயத்து தலைவர் சித்ரா மயில்சாமி, தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வம் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )