BREAKING NEWS

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.

பர்கூர் ஊசிமலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் இவரது மனைவி கவிதா வயது 35 கடந்த 12.06.2022 முதல் தனது மனைவி கவிதாவை காணவில்லை என முருகேசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கவிதாவை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் கவிதா கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தது போலீசாருக்கு தெரியவந்தது உடனடியாக கோவை பகுதிக்கு விரைந்து சென்ற பர்கூர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமை காவலர் கிருஷ்ணன். திருநாவுக்கரசு மற்றும் போலீசார் கவிதாவை பத்திரமாக மீட்டு அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலையில் 21.07.2022 இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )