பவானி எஸ் கே சி கபாடி குழு சார்பில் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டி நடைபெற்றது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்த கபடி போட்டியில் இறுதியில் கோபி ஏ எம் கே சி அணியினர் முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அன்னை தெரசா கபடி குழுவினர் பெற்றனர். அதேபோல் மூன்று மற்றும் நான்காம் பரிசுகள் தலா 8,000 ஆயிரம் மற்றும் கோப்பைகளை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்போர்ட்ஸ் கிங், வண்ணத்தமிழ் பி. மேட்டுப்பாளையம் அணியினர் பெற்றனர்.

இந்த கபாடி போட்டியின் முதல் பரிசு 20 ஆயிரம் மற்றும் கோப்பையை பவானி தொகுதி எம்எல்ஏவும் முன்னால் அமைச்சர்ருமான கே சி கருப்பணன் வழங்கி போட்டியினை துவக்கி வைத்தார்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன் வழங்கினார். இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ் கே சி கபாடி குழுவினர் செய்திருந்தனர்.
