தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது.
விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் அலுவலர் கே.சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் செயலாளருமான ராஜ்குமார், செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பேசினர்.
சீர்காழி செயற்பொறியாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கு தலைமை ஏற்று மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் பேசியதாவது. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு செயல்பாட்டை எடுத்து காட்டவும், மின்துறையின் சாதனைகளை பறைசாற்றவும், இந்த பெருவிழா நடத்தபடுகிறது. மேலும் அதிக அளவில் பொதுமக்கள் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் மின்சார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கதோடு இந்த விழா நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 803 கோடி செலவில் 2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி 1 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்புகள் வழங்கபட்டுள்ளன. மாநில அளவில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கபட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000; அழைப்புகள் பதிவு செய்யபட்டு 9,72,180 அழைப்புகள் சரி செய்யபட்டுள்ளன.
தமிழக அரசின் தொடர் முயற்சியால் 2021 -22 நிதி ஆண்டில் மின் உற்பத்தி நிலையங்களில் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையால் 2,200 கோடி சேமிக்கபட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மின் நிறுவு திறன் 32,595,06 மெகா வாட்டில் இருந்து 33,877,31 மெகா வாட்டாக உயர்த்தபட்டுள்ளது. இது போல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கபட்டுள்ளது என்று பேசினார்.
கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் செம்பனார்கோவில் உதவி செயல்பொறியாளர் அப்துல்வஹாப் மரைக்காயர் நன்றி கூறினார். படவிளக்கம்: தரங்கம்பாடியில் நடைபெற்ற ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழாவில் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்துகொண்டு பேசியபோது.