தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தின் இப்போது ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில்,
ஒத்துக் கொண்ட வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதை ஒட்டி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்,
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் கும்பகோணம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை உள்பட 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்