’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?
‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில், அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம், ’இந்தியன் 2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் இதில் நடிக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த பான் இந்தியா படத்தின் ஷூட்டிங், கிரேன் விபத்து காரணமாக நின்றது. தொடர்ந்து கரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு தடைபட்டது. லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து வழக்கும் தொடரப்பட்டது.
CATEGORIES Uncategorized