தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சை மேலவீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு பொது மக்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் காவிரி கரையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த முக்கிய விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க தமிழ் அரசு அறிவிப்பு விட வேண்டும் ரமலான் மாதங்களில் நோன்பு கஞ்சி வழங்குவதற்கு அரசு வழங்குவது போல் ஆடி மாதங்களில் ஆடி அமாவாசை ஆடி வெள்ளி ஆடிப்பெருக்கு என விழாக்கள் இருப்பதால் ஆடி மாதங்களில் அறநிலை துறை சார்பில் அரிசி வழங்கிட வேண்டும் எனக் கூறினார்.
CATEGORIES தஞ்சாவூர்