கேரளாவில் பெய்து வரும் கனமழையில் புகழ்பெற்ற மகாதேவர் கோயில் மூழ்கியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள பிரபல மகாதேவர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கோயிலைச்சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தபடி செல்கிறது. தொடர் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized