காட்பாடி ரயில் நிலையத்தில் கடத்தல் ரேசன் அரிசி பரிமுதல்


வேலூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசி ரயில்களில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் காட்பாடிரயில்வே போலீசார் எஸ் எஸ் ஐ முரளி மனோகரன் தலைமையில் காட்பாடி ரயில் நிலையத்தி நின்று செல்லும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தபோது 50 கிலோ கொண்ட 20 மூட்டை அரிசி இருந்தது. இதன் மொத்த எடை 1 டன் ஆகும் இதனை கைபற்றிய போலீசார் தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதேபோல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பெருமாள் எஸ்ஐ நாகராஜன். தலைமையிலான போலீசார் கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற800 கிலோ நேற்று நடந்த சோதனையில் 200 கிலோ கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 1 டன் அரிசியை வேலூர் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் இடம் ஒப்படைத்தனர். பெற்றுக்கொண்ட இவர் திருவலம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தார்
