BREAKING NEWS

மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!!

மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!!

மடப்புரம்: ஆகஸ்டு-15

மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சி,பெரிய மடப்புரத்தில் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 10 மணியளவில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜ் செல்வ நாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் M.ஜனகர் அவர்கள் கலந்துகொண்டார்.

ஊராட்சி மன்ற துணை தலைவர் வடிவுகரசி அசோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
G.மனோகரன்,கோவி.மனோகரன்,சித்ரா, கீதா,அருள் மொழி,அமுதா,விஜயகுமாரி உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சையம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணண், அங்காடி விற்பனையாளர் சோம சுந்தரம், பணிதள பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மதினாபீவி ஷாஜஹான் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )