சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றபடி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்
CATEGORIES தஞ்சாவூர்