BREAKING NEWS

மானாமதுரை சீனி சிலம்பப் பள்ளி மாணவர்கள் சாதனை…

மானாமதுரை சீனி சிலம்பப் பள்ளி மாணவர்கள் சாதனை…

தேனியில் நடைபெற்ற நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் பிவீட்ரேஷன் (இந்தியா) தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு சிலம்பாட்ட போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவர்கள் 10 வயது க்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் மித்ரா சுருள் வால் போட்டியில் முதலிடத்தையும் ஒற்றைக் கம்பு தனி திறமையில் 3 இடமும்,
ஹர்ஷிதா சுருள் போட்டியில் இரண்டாம் இடமும் தனித் திறமையில் மூன்றாம் இடமும்,
ஆண்கள் பிரிவில் தக்ஷித் தனித்திறமை இரண்டாம் இடமும் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடத்தையும்,
மணீஸ்குமார் சுருள் போட்டியில் முதலிடத்தையும், தனித்திறமையில் இரண்டாம் இடத்தையும் இரட்டைக் கம்பு பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அனுஜ் நிர்மல் தனித் திறமையில் மூன்றாவது இடத்தையும் இரட்டைக் கம்பு பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுருள்வால் போட்டியில் மூன்றாம் இடத்தையும் ,
தர்ஷன் தனித்திறமை இரண்டாம் இடத்தையும் இரட்டை கம்பு மற்றும் சுருள்வால் போட்டியில் மூன்றாம் பரிசை பெற்றுள்ளார்.
அரவிந்த்குமார் தனித் திறமை மற்றும் இரட்டைக் கம்பு பிரிவில் மூன்றாம் பரிசுகளை பெற்றுள்ளார்.
13 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ராஜேஷ் தனித் திறமையில் முதல் இடத்தையும் இரட்டைக் கம்பில் மூன்றாம் இடத்தையும் சுருளால் போட்டியில் இரண்டாம் இடத்தையும்,
ரித்தீஷ் தனித் திறமையில் இரண்டாம் இடத்தையும் இரட்டை கம்பு பிரிவில் முதலிடத்தையும் சுருள் வால் போட்டியில் மூன்றாம் பரிசு ,
மிதுன்ஆர்யா தனித்திறமையில் மூன்றாம் பரிசையும் இரட்டை கம்பு பிரிவில் முதலிடத்தையும் சுருள்வால் போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளார்,
ஜெசன் ஒற்றைக் கம்பு தனித்தனி போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்,
ஆதித்யா தனித்திறமை இரண்டாம் இடமும் இரட்டைக் கம்பு மூன்றாம் இடம் சுருள்வால் போட்டி முதலிடத்தையும் பெற்றுள்ளார்,
அகத்தீஸ் குமார் தனித்திறமையில் இரண்டாம் இடமும் இரட்டைக் கம்பு மற்றும் சுருள் வால் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றுள்ளார்.
கமல் நாத் தனித் திறமையில் முதலிடத்தையும் இரட்டைக் கம்பு பிரிவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
17 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ராஜகாளி முத்து தனித்திறமையில் இரண்டாம் பரிசையும் இரட்டைக் கொம்பு பிரிவில் முதலிடத்தையும் சுருள் வால் போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளார்.
மொத்தம் ஒன்பது முதலிடத்தையும் 11 இரண்டாம் இடத்தையும் 18 மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். குழு போட்டியில் பங்கு பெற்று மூன்றாவது பரிசுக்கான சுழல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த பள்ளியின் பயிற்சியாளர்கள் ஆறுமுகம் மற்றும் செல்வம் முனியாண்டி மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தி வரவேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )