BREAKING NEWS

லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவிடைமருதூர் வட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கம் தலைவர் என்.மகாலிங்கம் தலைமை தாங்கினார் எம். சிக்கந்தர் ஹயாத்கான்.டி ராஜ்குமார்.எஸ். விஜயசரவணன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன்.பேரூராட்சி துணைத் தலைவர் எம்.சம்சுதீன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் உடன் கவுன்சிலர் சுகன்யா மற்றும் நேற்று நடைபெற்ற முகாமிற்கு தன்னார்வலர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் தானாக முன்வந்து இரத்ததான முகாமில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்தனர் உடன் லயன்ஸ் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.இதில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு 32 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )