ஏரிமேட்டுத்தெரு அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது மாரியம்மன் கோவில் குளக்கரையிலிருந்து புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் சக்திகரகம் அழகு காவடி பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர் பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர் இந்நிகழ்ச்சிக்கு மேலையூர் கிராமவாசிகள் ஏரிமேட்டுத்தெருவாசிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.