தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே காட்டுச்சேரி விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்.
சீர்காழி கல்வி மாவட்டம் தரங்கம்பாடி குறுவட்டஅளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அ.ரேணுகா தலைமை வகித்தார். சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, ஆறுபாதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராதிகா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் பானுமதி வரவேற்றார்.
தரங்கம்பாடி குருவட்ட அளவிலான 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14,17,19 வயது கொண்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.
இதில் செம்பை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், காட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுவாமிநாதன், உடற்கல்வி இயக்குனர்கள் பிரபாகர், செல்வகணேசன், ஆசிரியர்கள் வீரமணி, பாலமுருகன், சுதாகர், செந்தில், ஷாஜகான், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.