மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் மற்றும் படிப்பை தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்
பள்ளியின் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் குழுவின் பொறுப்பு ஆசிரியர் திரு சரவணன் அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்
பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி அவர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் அதனுடைய உதவித்தொகை குறித்த சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் படிப்பை தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
உயர்கல்வியில் தொடராத மாணவர்களுக்கு ஆலோசனைகள் எடுத்து கூறப்பட்டது
மற்றொரு நிகழ்ச்சியாக மாலை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு நைனா முகமது உள்ளாட்சி பிரதிநிதி திருநெல்வேலி மாநகராட்சி 18-வது மாவட்ட உறுப்பினர் திரு சுப்பிரமணியன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் காலையில் நடைபெற்ற உயர் கல்வி குறித்த நிகழ்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது
பொறுப்பு ஆசிரியை திருமதி உமா அவர்கள் நன்றி கூறினார்