தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது வீட்டில் வைத்து வழிப்படுவதற்காக களிமண் விநாயகர், வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
முழு முதற்கடவுளாக வணங்கப்படும் விநாயகரை போற்றி விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சை நகர வீதிகளில விநாயகர் சிலை விற்பனை களைகட்டி உள்ளது. அச்சில் வடிவமைக்கப்பட்ட களிமண் விநாயகர், வர்ணம் பூசப்பட்ட பிளாஸ்டாபரிஸ் விநாயகர் பல அவதாரங்களில் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன வீடுகளில் விநாயகர் வைத்து வழிப்படுவதற்காக விநாயகர் சிலைகளுடன்.
வாசலில் கட்டுவதற்காக வாழைக்கன்று, பனை ஓலை. ‘மாவிலையும், பூஜை செய்வதற்காக எருக்கம்பூ மாலை. அருகம்புல், சாமந்தி பூ. நாவல் பழம் உள்ளிட்ட பொருட்களையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
விநாயகர் சிலை, பூக்கள். பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருவதால் வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.