நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.

நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமச்சந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அப்பகுதி மக்கள் நல சங்கம் மற்றும் நெல்லை மாநகர 54 வது வார்டு மா மன்ற உறுப்பினர் திரு.K.K.கருப்புசாமி கோட்டையப்பன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கண்காணிப்பு கேமரா பொறுத்த ஏற்பாடு செய்து 31-08-2022 ம் தேதியன்று, நெல்லை மாநகர கிழக்கு காவல்துணை ஆணையாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 கண்காணிப்பு கேமராக்களை துவங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்ததி சிறப்புரையாற்றினார்கள்.
உடன் மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள், பெருமாள்புரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் அவர்கள், பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.
ஜெயலட்சுமி அவர்கள் மற்றும் மக்கள் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.