BREAKING NEWS

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு கூறும் நிகழ்ச்சி.

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு கூறும் நிகழ்ச்சி.

தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை கூறும் இசையார்ந்த நாடகம் சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது.

 

 

  உயிரோட்டம் உள்ள இந்நாடகத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிராய்தமாக திகழ்ந்த ராணி வேலுநாச்சியார், பெரிய மருது, சின்ன மருது, குயிலி, உடையாள் ஆகியோரை கண்முன்னே நிறுத்தினர்.

 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்,கே.ஆர் .பெரியகருப்பன் அவர்கள், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள், ராணி மதுராந்தகம் நாச்சியார் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி அவர்களும்,

 

மாவட்டக் கழக துணை செயலாளர் சேங்கைமாறன் அவர்கள், நகர மன்ற தலைவர். துரைஆனந்த் அவர்கள், மற்றும் மேலப்பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அரசுத்துறை அதிகாரிகள், மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள் மற்றும் கழகஉடன்பிறப்புகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )