அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சுலபமாக தீர போவதில்லை என்றும், இருவருக்கும் ஏற்படும் சண்டை கொள்கை ரீதியான சண்டை இல்லை என்றும், பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்:
அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இன்று வந்துள்ள தீர்ப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள்கேள்வி எழுப்பினர்:
அதற்க்கு பதலளித்த பாலகிருஷ்ணன்:
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சுலபமாக தீர போவதில்லை என்றும், இருவருக்கும் ஏற்படும் சண்டை கொள்கை ரீதியான சண்டை இல்லை என்றும்,
குறிப்பாக பிஜேபியை ஆதரிப்பது இருவருக்கும் ஒரே நிலைப்பாடு தான் எனவும், ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள சண்டை அதிகாரம், பணம், பதவி ஆகியவற்றிற்கான சண்டை என தெரிவித்தோடு,
மத்திய பிஜேபி அரசு இருவரையும் கட்டாயப்படுத்தி கை குலுக்க வைத்தால் என்ன செய்வது என்று சொல்ல முடியாது எனவும் விமர்சனம் செய்தார்.