BREAKING NEWS

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும் , நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும் , நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை.

திண்டுக்கல்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும், நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் அதனை மறுத்தால் மூன்று நாள் ஊதியம் இல்லா விடுப்பை எடுக்கப் போவதாக முதன்மை செயலர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை ‌. ‌ ‌

 

 

 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தனியார் மஹாலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடுமையாக பணி சுமை இருப்பதனை குறைத்திடவும் நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவும் முதற்கட்டமாக கவன ஈர்ப்பு இயக்க நடவடிக்கை நடத்தப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு தாங்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது. ஊரக வளர்ச்சித் துறையின் ஆணிவேராய் செயல்படும் ஊராட்சி செயல் அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் அதீத பணிச்சுமைகளையும் நோக்கில் மன அழுத்தங்களையும் குறைக்க நோக்கிலும் நெடுங்காலமாக கோரி வருகின்ற கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் தமிழக அரசுக்கு ஆதரவாக என்றும் இருந்து வரும் இவ் அமைப்பு தற்போது அலுவலர்களின் உயர் அழுத்தம் காரணமாக கவலை இருப்பு நடவடிக்கை செல்ல வேண்டியது உள்ளது எனவே எங்கள் உறுப்பினர்கள் வேண்டுகோளை ஏற்று பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்து இரண்டு கட்டளை இயக்க நடவடிக்கை மாநிலம் தழுவி மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

அதில் ஊராட்சி செயலர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் என்னிடம் பணி அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர் ஒரே பணியாளர் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது இதனால் ஊராட்சி செயலர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சாலை விபத்துகளை சந்திப்பதும் கடும் மன அழுத்த நோய்க்கு ஆளாவதும் பணியிடத்திலிருந்து மன நிம்மதி தேடி குடும்பத்தை நெருக்கடியாக தவிக்க விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

 

இதில் சில பேருக்கு இதய அடைப்பு ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் உயிரையும் இழக்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே இவர்களுடைய மனநலம் காக்க உடனடி நடவடிக்கை தேவை எனவும், பல்வேறு மாவட்டங்களில் பல ஊராட்சி தலைவர்கள் ஊதியம் அனுமதிப்பதில் மிக தாமதம் செய்வதாலும் பல தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாலும்,

 

ஊராட்சி செயலர்களின் நெடுங்கால கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் பெருவகையில் உடனடியாக உத்தரவினை பிறப்பித்து ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் பெறுவதனை உறுதி செய்ய வேண்டியும்,

 

ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குழு மூலம் நிரப்புதல் புதிய பண விதிகள் அரசாணையை வெளியிடுதல், ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், பென்ஷன் திட்டத்தில் சேர்த்தல் ஆகிய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் முன்வைத்து எதிர்வரும் 12/09/2022 திங்கள் கிழமை முதல் 14/09/2022 புதன் வரை மொத்தம் மூன்று நாட்கள் தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊராட்சி செயலரும் ஊதியமில்லா விடுப்பை துறப்பார்கள் அதனை அடுத்து தொடர் விடுப்பு நடவடிக்கை முழு அளவில் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எங்களின் இக்கட்டான நிலை கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலதண்டாயுதபாணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )