தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சட்ட விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது.
அரசு பொறியியற் கல்லூரி போடிநாயக்கனூரின் கலையரங்கத்தில் 08.09.2022 அன்று மாலை 3 மணி அளவில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழாவில் முதல்வர் V திருநாவுக்கரசு அவர்கள் மாணவர்கள் சந்திக்கும் நவீன சிக்கல்கள் பற்றியும் இணைய பாதுகாப்பு பற்றியும் உரையாற்றினார்.
வழக்கறிஞர் P.கணேசன் அவர்கள் மாணவர்களுக்கு சட்ட அறிவின் முக்கியத்துவம் பற்றி பேசினார். மூத்த சிவில் நீதிபதி K. ராஜ்மோகன் அவர்கள் மாணவர்களிடையே சட்டப் பாதுகாப்பு பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
இயந்திரவியல் துறையின் உதவிப்பேராசிரியர் R. ஜெயஸ்ரீ நன்றியுரையாற்றினார். துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.