தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட்டில் தானியங்கி நாப்கின் எரிக்கும் இயந்திரத்தை துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மாநகராட்சி சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன இதில் பல்வேறு கடைகளில் மகளிர் பணியாற்றி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் மகளிருக்கு சுகாதார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் அங்கு உள்ள மகளிர் கழிப்பிடத்தில் மகளிர் பயன்பாட்டிற்காக சுகாதார வசதிக்காக தானியங்கி நாப்கின் எரிக்கும் இயந்திரத்தினை துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் காந்திமதி உஷா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்