தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை மின்வாரியத்தில் உட்பட்ட களப்பாளங்குளம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில்sc/No401 ரீடிங் எடுக்க வருபவர் மதுபோதையில் 200 யூனிட்டுக்கும் கீழே ஓடிய ரீடிங் கை 1000 யூனிட் ஓடியதாக கணக்கு எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் தற்போது விவசாயி கிருஷ்ணசாமிக்கு 6000 ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது
மேலும் இதே ஊரைச் சேர்ந்த வீரக்குமார் சர்வீஸ் நம்பர் 455 இவருக்கும் 1700 யூனிட் ஓடியுள்ளது என்றும் வீரக்குமார் 10000 ரூபாய் கட்ட வேண்டும் என்று அறிக்கை உள்ளது இதேபோல் களப்பாளங்குளம் கிராமத்தில் மேலும் சில விவசாயிகள் வீட்டில் இதேபோல் மின் அளவு எடுக்க வருபவர் இதே தவறை செய்து உள்ளார்.
மேற்படி மின்சாரம் ரீடிங் எடுக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அரசு ஊழியராக இருந்தும் இப்பேர்ப்பட்ட தவறுகள் செய்து வரும் இந்த நபர் மீது மின்வாரியம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் மேலும்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உண்மையானமின் ரீடிங் தொகையை அறிவிக்க வேண்டும் இதில் காலதாமதம் படுத்தக்கூடாது .
இல்லையெனில் பழங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் அணிதிரண்டு பிரச்சனையை தீர்க்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது
தமிழ் விவசாயிகள் சங்கம் தென்காசி மாவட்ட குழு.