நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் தற்போது நவீன படுத்துவதற்காக பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருக்கும் மரங்களை அகற்றியதை கண்டித்து திடீரென சாலை மறியலில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கரன் தலைமையிலும்,
தெற்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் திடீரென ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் உடனடியாக கைது செய்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஒன்றிய பொதுச் செயலாளர்கள் விக்னேஷ், அம்சு பாண்டி,
விவசாய அணி மாவட்ட செயலாளர் சுந்தர் ராஜா,
ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் உள்பட 20 பேர்களை கைது செய்தனர் இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.