தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புகார் மனுவை வழங்கினர்.

தேனி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையிலும் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலையிலும் நாமக்கலில் திமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,
கலந்து கொண்ட ஆராசா இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் நிலையில் ஆ ராசா மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கினர்.
இந்த புகார் மனு வழங்கும் நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் மலைச்சாமி மாரிச்செல்வம் நகரத் தலைவர் மதிவாணன் அரசு தொடர்பு மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி