செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,
கடந்த வியாழக்கிழமை அன்று சாத்தனூர் அணை நீர் பிடிப்பில் பழனி என்பவர் கள்ளத்தனமாக மீன் பிடித்ததாக கூறி ஒப்பந்ததாரரின் மீன் வாகனம் ஓட்டும் தினகரன் என்பவர் மார்பில் தாக்கியதாக பழனி கடந்த மூன்று தினங்களாக உறவினர்களிடம் மார்பில் வலி உள்ளதாக கூறி வந்துள்ளதாகவும்,
இன்று காலையில் பழனி வீட்டிலிருந்து வெளியே வராததால் அவரது உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது பழனி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் பழனியில் மரணத்தின் மீது சந்தேகம் உள்ளதாக கூறி,
புகார் அளித்ததை தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.