தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார் போராட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தொடங்கி வைத்து பேசினார்.
தற்போது வழங்கியுள்ள அகவிலைப்படி மூன்று சதவீதத்தை கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் வழங்க வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக கூடுதல் தொகை பிடித்தம் செய்வதை குறைக்க வேண்டும்,
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோர்க்கிகளை வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தை கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் நிறைவு செய்து பேசினார்.
CATEGORIES தஞ்சாவூர்