கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து காசாகிராண்ட் நடத்திய 9வது கோல்ஃபெர்ஸ் கிளாசிக் ட்ரோபி112-க்கும் அதிகமான கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு..!!

கோயம்புத்தூர், இந்நாட்டில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு, கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் – ன் ஒத்துழைப்போடு வருடாந்திர கோல்ஃப் போட்டித்தொடரின் 9-வது பதிப்பை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.
காசாகிராண்டு கோல்ஃபர்ஸ் கிளாசிக் ட்ரோபி என்ற கௌரவம்மிக்க விருதையும், பரிசுக்கோப்பையையும் வெல்வதற்காக கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இம்மாபெரும் போட்டியில் நாடெங்கிலுமிருந்து 112 வீரர்கள் வெகு ஆர்வத்தோடு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவயதினர் மத்தியில் இவ்விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் கூட்டாண்மையோடு பல ஆண்டுகளாகவே இப்போட்டியை காசாகிராண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் மற்றும் மனஅழுத்தத்தை சமாளிப்பதற்கும் உகந்த பொழுதுபோக்காகவும் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் நல்ல விளையாட்டாகவும் கோல்ஃப் கருதப்படுகிறது.
கோல்ஃப் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் சாமான்ய நபர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இவ்விளையாட்டு அனைத்து வயதினரும் மற்றும் அனைத்து சமூக – பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விளையாடுவதற்கு உகந்தது என்ற கருத்தை வலியுறுத்தவும் வகை செய்கின்ற காசாகிராண்டு கோல்ஃப் கிளாசிக் டிரோபி போட்டி நிகழ்வானது, இளம் வீரர்களுக்கு அவர்களது கோல்ஃப் விளையாட்டுத் திறனை உலகிற்கு காட்சிப்படுத்த நல்ல தளத்தை அமைத்துத் தருகிறது.
காசாகிராண்டு நிறுவனத்தின் கோயம்புத்தூர் மண்டலத்திற்கான இயக்குனர் திரு. செந்தில் குமார், “இப்போட்டி நிகழ்வு குறித்து கூறியதாவது: “சமூகத்தில் ஆக்கப்பூர்வமான, நேர்மறையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்காக காசாகிராண்டு எப்போதும் செயலாற்றி வந்திருக்கிறது; அதே நேரத்தில் சமுதாய நலனிற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை திரும்ப வழங்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையையும் கொண்டிருக்கிறது.
கோல்ஃப் விளையாட்டு மீதான விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விளையாட்டில் ஈடுபடுமாறு செய்ய ஊக்குவிக்கவும், கோல்ஃபை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளையும், போட்டிகளையும் கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப், அது தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சிறப்பாக நடத்தி வருகிறது.
இத்தகைய சிறப்பான நோக்கத்திற்காக நடத்தப்படும் இப்போட்டி நிகழ்வோடு காசாகிராண்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதிலும் கௌரவம்மிக்க போட்டியாக கருதப்படும் இதில், பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம்.
காசாகிராண்டு கோல்ஃபர்ஸ் கிளாசிக் டிரோபி வழியாக நம் நாட்டில் கோல்ஃப் விளையாட்டுத்திறனை மேலும் மேம்படுத்தி உலகளவில் முன்னிலைப்படுத்தும் குறிக்கோளோடு கோல்ஃப் விளையாட்டு வீரர்களையும் மற்றும் இவ்விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களையும், உற்சாகப்படுத்தி உத்வேகம் அளிக்க நாங்கள் முற்படுகிறோம்.
இந்த விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை எடுத்துக்கூறி இதனை பிரபலப்படுத்துவதும் எமது நோக்கமாகும். ”டபுள்ஸ் மெடல் சுற்று, பெஸ்ட் பால் ஃபார்மேட் என இருநாட்கள் நிகழ்வாக நடைபெற்ற இப்போட்டியில் 112 கோல்ஃப் வீரர்கள் மொத்தத்தில் பங்கேற்றனர்.
ஆர்வத்தோடும், ஆரோக்கியமான போட்டி உணர்வோடும் நடைபெற்ற இந்த கோல்ஃப் போட்டியில் Nett 0-24 வகையினத்தில் வெற்றியாளர்களாக திரு. N. லீலாகிருஷ்ணன் மற்றும் திரு. சந்திரசேகர் (62) முதலிடம் பிடித்தனர். மிஸ். ஶ்ரீ ரித்தி லட்சுமி மற்றும் டாக்டர். பீயூஷ் மனியம்பத் (66) ஆகியோர் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.
Gross வகையினத்தின் கீழ் திரு. S. பரத்ராம் மற்றும் திரு. J. விக்னேஷா (69) ஆகியோர் முதலிடத்தையும் மற்றும் திரு. V.R. நரேன்குமார் மற்றும் திரு. J.J. சக்கோலா (74) ஆகியோர் ரன்னர்ஸ் – அப் ஆகவும் வெற்றிவாகை சூடினர்.
இவை மட்டுமன்றி, இன்னும் பல வகையினங்களின் கீழ் கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து, காசாகிராண்டு இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோல்ஃப் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவித்தது.
Closest to the Pin: Hole No. 4: Mr J J Chakola : 6.3 Feet
Closest to the Pin: Hole No.14 : Mr K Prabhu Shanker : 11.9 Feet
Straightest Drive: Hole No.13 : Mr Prassadh Shanmugam : 2 Inch
Feet Longest Drive: Hole No. 2 : Mr J Vignessh : 278 Yards
காசா கிராண்டு குறித்து:
பேரார்வங்களை உருவாக்குவது மற்றும் மதிப்பினை வழங்குவது மீது பொறுப்புறுதி கொண்ட ஒரு நிறுவனமாக 2004-ல் தொடங்கப்பட்ட காசா கிராண்டு, ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாகும்.
சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 36 மில்லியன் சதுரஅடிக்கும் அதிகமான பரப்பளவில் ப்ரீமியம் தரத்திலான குடியிருப்பு வளாகங்களை இந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
140 – க்கும் அதிகமான குடியிருப்பு வளாகங்களில் சிறந்த வசதிகளோடு வசித்துவரும் 30000 -க்கும் கூடுதலான மகிழ்ச்சியான குடும்பங்கள் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உணர்விற்கும் பொறுப்புறுதிக்கும் சாட்சியமாக திகழ்கின்றன.
எமது நம்பிக்கையை பிரதிபலிக்கின்ற உயர்தரத்திலான வாழ்விட அமைவிடங்களை உருவாக்குவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பயணம் 17-வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது.
ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல செயல்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் காசாகிராண்டு, நிலைத்து நீடிக்கும் மதிப்பீடுகள், நேர்மை மற்றும் தரம் ஆகிய உயரிய பண்பியல்புகளை கொண்டு இன்னும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.