வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.

வாழப்பாடி செய்தியாளர் சந்தானம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.
வாழப்பாடி பள்ளியில் உற்சாக வரவேற்பு அரசு பள்ளி மாணவி சாதனை.
தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் வாழப்பாடி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்தார். அவருக்கு தேசிய அளவில் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மகள் இளம்பிறை. வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது அறிவுத்திறனை பயன்படுத்தி வடிவமைத்து செயல் விளக்கம் அளித்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரத்தில் விபத்தை தடுக்கும் கருவியை செய்தார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை தேர்வு குழுவினர் பரிசீலனை செய்தனர். இந்த புதிய கண்டுபிடிப்பு தேசிய அளவிலான இன்ஸ்பயர் மனாங் விருதும் மூன்றாம் பரிசம் கிடைத்தது.
தமிழகத்திலிருந்து தேசிய அளவிலான இந்த விருதை மாணவி இளம்பிறை முதன்முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் புதுடெல்லியில் விஞ்ஞான்பவன் வளாகத்தில் 16ஆம் தேதி நடைபெற்ற விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயேந்திர சிங் மாணவி இளம்பிறைக்கு இந்த விருதினை வழங்கி பாராட்டியுள்ளார்.
தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று தமிழகத்திற்கும் வாழப்பாடி அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி இளம்பிறைக்கு கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகள் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை, பசுமை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளது.
விருது பெற்ற மாணவி இளம்பிறை தெரிவித்த போது, தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் புதுடில்லிக்கு சென்று பங்கேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
பெருமிதமாக உள்ளது எனவும் தன்னை ஊக்கப்படுத்தி விருது பெறுவதற்கு உதவிய பெற்றோர்கள் சகோதரி, பள்ளி தலைமை ஆசிரியை ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
நல்ல முறையில் கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவது தனது எதிர்கால லட்சியம் எனவும் மாணவி இளம்பிறை தெரிவித்தார்.