அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

செய்தியாளர் பா. ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பொய்யேரிகரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இவர்கள் இப்பகுதியில் உள்ள பொய்ஏரிகரை பகுதிக்கு சென்று வர பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தனிநபர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து நீதிமன்றம் மூலம் அதிகாரிகள் இன்று நிலஅளவையர் மூலம் அளவீடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அளவீடு செய்ததில் தவறு உள்ளது எனக் கூறி பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்தியூர் கள்ளிமடை குட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் வட்டாட்சியர் (பொறுப்பு) இளஞ்செழியன் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்
சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அளவீடு தவறு எனில் மீண்டும் நீதிமன்றம் மூலம் மேல்முறையீடு செய்து மீண்டும் அளவீடு செய்யலாம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்தியூர் கள்ளிமடை குட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.