BREAKING NEWS

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.

 

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவி கல்லூரியில் தமிழ்நாடு 14 பட்டாலியன் என்.சி.சி சார்பில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான 8 நாள் பயிற்சி முகாமின் நிறைவு விழா ஸ்ரீவி கல்லூரியின் உள் வளாக அரங்கில் நடைபெற்றது.

 

இவ்விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. இவ்விழாவில் ஸ்ரீவி கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ். சுதந்திரம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் இக்கல்லூரியின் செயலாளர் கே. பிரபாகரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இவ்விழாவில் கல்லூரியின் டீன் முனைவர் எம்.ராஜா, கல்லூரியின் இயக்குனர் முனைவர் என். சுரேஷ்குமார், கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆர்.அசோக்ராஜன், ஆளுமை திறன் இயக்குனர் சாந்தி,

 

தொழில் வழிகாட்டி இயக்குனர் பிரியா, ஸ்ரீவி கல்லூரியின் துணை முதல்வர்கள் முனைவர். சதீஷ்குமார் முனைவர். சத்யா மற்றும் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கெடுத்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

 

 

மாநில அளவிலான தேசிய மாணவர் படை முகாமிற்கு திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் , தேனி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர்படை, தரைப்படை மற்றும் விமானபடையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

 

இம் முகாமில் குடியரசு தின அணிவகுப்புக்கான பயிற்சி, வரைப்பட படிப்பு பயிற்சி, ஆளுமை பண்புகளை வளர்த்தல் தொடர்பான பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது.

 

இதில் பள்ளி கல்லூரி சார்ந்த தேசிய மாணவர் படை அதிகாரிகள் 10 பேர், ராணுவ நிரந்தர பயிற்சியாளர்கள் 14 பேர் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பயிற்சி அளித்த திண்டுக்கல் 14 தமிழ்நாடு என்.சி.சி பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் சந்தீப் மேனனை கெளரவப்படுத்தும் விதமாக திண்டுக்கல் தாடிக்கொம்பு ஸ்ரீவி கல்லூரியின் செயலாளர் கே. பிரபாகரன் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசினை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியின் போது சிறப்பாக பயிற்சி அளித்த இராணுவ நிரந்தர பயிற்சியாளர் சுபேதார் மேஜர் நாம்தேவ், நயப் சுபேதார், சசிகுமார்,சி.ஹச்.எம்.வடிவேல் உட்பட 14 பேருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியின் முடிவில் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ, சுபாஷ் மற்றும் ஜிம் பயிற்சியாளர் அஜேஷ்குமார், கல்லூரி அட்மின் மேனேஜர் மணிகண்ட பாபு மற்றும் சுதாகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )