BREAKING NEWS

குத்தாலம் வட்டார பொதுசுகாதாரத்துறை சார்பில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

குத்தாலம் வட்டார பொதுசுகாதாரத்துறை சார்பில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

 

 

மயிலாடுதுறை மாவட்டம். குத்தாலம், சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், ஆனாங்கூர், டி. பண்டாரவாடை போன்ற ஊர்களில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி சோதனை நடத்தப்பட்டது.இதில் புகையிலைப் பொருட்களை கண்டுபிடித்து,அழிக்கப்பட்டன. அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. 

 

மேலும்,கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

 

அயோடின் உப்பு இல்லாத உப்பு பாக்கெட்டுகளையும் கண்டறிந்து அழிக்கப்பட்டதோடு,இனிமேல் அயோடின் உப்பு மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

மேலும்,கடைகளில் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் அடங்கிய போர்டு வைக்காத கடைகளுக்கும் அபராதம் விதித்ததோடு, போர்டு இல்லாத கடைகளிலும் உடனடியாக வைத்திட அறிவுறுத்தப்பட்டது.

 

 

இந்த ஆய்வின் போது துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் இராஜமாணிக்கம் மற்றும் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது இதில்,

 

சுகாதார ஆய்வாளர்கள் வி.முத்துக்குமரசாமி, ப.சந்திரசேகர், கே.வி.முருகேசன், எம்.முரளி, கே.பிரித்விராஜ், ஈ.முருகன், மு.செல்வவிக்னேஷ், அ.சீலன், கணேஷ்கர் மற்றும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். கடைகளில் அபராதம் வசூலிக்கப்பட்ட தண்டத் தொகையினை அரசின் கணக்கில் செலுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )