தஞ்சையில் மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சரபோஜியின் சிலைக்கு கூடுதல் ஆட்சியர் மருத்துவர் சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜியும் ஒருவர்,இவர் 1797 முதல் 1832 வரை ஆட்சி செய்தார்.
இவர் உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூலகத்தை தோற்றுவித்தார்,இவரது 245 வது பிறந்தநாள் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் சங்கீத மஹாலில் தர்பார் ஹாலில் உள்ள சரபோஜியின் முழுஉருவ பளிங்கு சிலைக்கு கூடுதல் ஆட்சியர் ( வருவாய்) மருத்துவர் சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இந்நிகழ்ச்சியில் சங்கீத மஹால் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்