ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வண்டான கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை நகர செயலாளர் மோகன்,கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன்,

ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி,பன்னீர் குளம் கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, நொச்சிகுளம் கிளைச் செயலாளர் காளியப்பன்,
அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,சீனி நாடார், அதிமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, கடம்பூர் மாயா துரை, கடம்பூர் விஜி, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
