BREAKING NEWS

சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.

சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.

சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோயில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

 

சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் செப்.19ம் தேதி 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர், செல்போனில் ஆபாச படம் பார்த்தள்ளார்.

 

அத்துடன் ஆபாச சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த செயல் கோயிலி்ல் உள்ள சிசிடிவியில் தெரியவந்தது.

 

இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில், கோயில் குருக்கள் பிரசாத் புகார் அளித்தார்.

 

இதன் பேரில் போலீஸார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தைக் கண்டு அந்த வாலிபரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வாலிபர் போலீஸார் பிடியில் சிக்கினார்.

 

விசாரணையில் அவர் புதுச்சேரியைச் சேர்ந்த அருண் என்பதும், திருமணமாகி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி பிரிந்து சென்றது தெரியவந்தது.

 

மேலும் திருவல்லிகேணி பகுதியில் மேன்சனில் தங்கி உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வரும் அருண், விசுவல் கம்யூனிகேசன் படித்து மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதுவரை பகுதி நேரமாக உணவு டெலிவரி பணி செய்து வருவதும் தெரிய வந்தது.

 

சம்பவத்தன்று மது போதையில் செல்போனில் ஆபாச படத்தை பார்த்து கொண்டே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக, தெரிவித்துள்ளார்.

 

மேலும் மது போதையில் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தொலைத்து விட்டு அவர் புதுச்சேரி சென்று விட்டது தெரியவந்தது. பின்னர் அருணை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )