நெல்லை – அம்பை புதிய சாலை பணியை விரைந்து முடிக்க எம்எல்ஏ இசக்கி சுப்பையா கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறும்போது;-
அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பயணிகளிடம் கூடுதலாக 5 ருபாய் வசூலிக்கப்படுகிறது இது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிப்பதற்கு பொது மக்களிடம் கட்டணம் வசூ விக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
அம்பாசமுத்திரம் பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவது குறித்து எம்.எல்.ஏ. என்ற முறையில் எனக்கு தகவல் கூட தெரிவிக்க வில்லை என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது மணிமுத்தாறு சிவன் பாபு வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.