அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.

செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ஆகிய கிராம மக்களுக்கும் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை துண்டித்து மணல்களையும், சவுடு மண்ணையும் அள்ளிக்கொண்டு மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக இரவும் பகலுமாக அள்ளி வந்தனர். இந்நிலையில் இது குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு ஜே.சி.பி. எந்திரத்தில் லாரிகளில் பட்டப்பகலிலேயே மண்ணை அள்ளிக் கொண்டிருந்தனர்.
உடனே அதிகாரிகள் வரும் வருவாய் துறையினர் வருவதைக் கண்ட ஜே.சி.பி .டிரைவர் மற்றும் லாரி டிரைவர் வாகனத்தை மிக விரைவாக எடுத்து அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடினார்கள்.
இதைப்பார்த்த சித்தர்கள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட அனைவரும் லாரியை மறிக்க முயன்றனர்.
ஆனால் மணல் மற்றும் சவுடு மண் வண்டியை நிறுத்தாமல் வண்டியை எடுத்துச் சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சித்தர்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் சோபனா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கைக்காக புகார் கொடுத்துள்ளார்.
படவிளக்கம் அணைப்பட்டி அருகே ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் பட்டப்பகலில் சவுடு மணல், மண் அள்ளிய போது எடுத்த படம்.