ஆர்.எஸ்.எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக: தஞ்சையில் நடிகை கஸ்தூரி பேட்டி

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக தஞ்சை திமுக மேயரை சந்தித்தபின் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திரைப்பட நடிகை கஸ்தூரி இன்று திடீரென தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மேயர் சன் ராமநாதன் ஆணையர் சரவணகுமார் ஆகியோரை நேரில் பார்த்து அவர்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணதிட்டம் கொண்டு வந்த போது பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என வரவேற்றோம் தற்பொழுது திமுக அமைச்சரே ஓசி பயணம் என கொச்சை ப்படுத்தி இருக்கக் கூடாது பொன்முடி பேசியதை நியாயப்படுத்த முடியாது என்றார் அமைச்சர் உட்பட எந்த ஒரு ஆணும் ஒன்பது மாதங்கள் எந்தவித பணமும் கொடுக்காமல் பெண்களின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் என்றார் பெண்களை மதித்துப் பேச வேண்டும்.
உதாசீனப்படுத்தி பேசக்கூடாது என்றார் ஒரு செயலை எதிர்க்க எதிர்க்க அது வளரும் என்பதைப் போல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தமிழகத்தில் திமுக எதிர்த்து எதிர்த்து வளர்த்து விடுகிறது.
ஆர்.எஸ்.எஸ் என்ற மூன்றெழுத்தை மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருகிறது. என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டார்.
தற்பொழுது எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் பாராட்டும்படி செயல்படுவதாக அவர் கூறினார்.