BREAKING NEWS

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.

 

சிவகங்கை மாவட்டம் தமிழக அரசு முதல்முறையாக சுற்றுலாத்துறைகாண 17 விருதுகள் வழங்கப்பட்டது.

 

இதில் சுற்றுலாத்துறை இயக்குனர்கள் சிறந்த சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் சிறந்த தங்கும் விடுதிகள் சிறந்த விமானங்கள் நிறுவனங்கள் போன்ற மேலும் பல விருதுகளை வழங்கப்பட்டது . ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 27 நாள் அன்று உலக சுற்றுலாத்தளம் கொண்டாடப்படுகிறது.

 

 

இந்தாண்டு சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் சுற்றுலாத்துறைகாண விருதுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு சிறந்த சுற்றுலாத்துறை வழிகாட்டியான 5 விருதுகள் வழங்கப்படது.

 

இதில் நமது பெருமைமிக்க சிவகங்கை வேலு நாச்சியார் ஆண்ட மண்ணின் சிறப்புமிக்க சுற்றுலாத் துறைக்கான விருதை தமிழக அரசு வழங்கியது இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சா. மணிகண்டன் அவர்களுக்கு சிறந்த சுற்றுலாத் துறைக்கான விருது வழங்கப்பட்டனர்.

 

சுற்றுலாத்துறையில்16 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் திரு சா. மணிகண்டன் அளித்த பேட்டியில் சுற்றுலாத்துறையில் மேல் இருந்து ஆர்வத்தில் உணவகம் மற்றும் சுற்றுலா மேன்மையில் முதுகலை பட்டமும் பிரெஞ்சு மொழியில் முதுகலைப்பட்டமும் மென்பொருள் நிறைஞ்ச எம்பில் பட்டமும் ஜேர்மனி மற்றும் ஹிந்தி மொழியில் பட்டய சான்றிதழும் பெற்று உள்ளேன். 

 

 

காரைக்குடியில் சுற்றுலா பிரெஞ்சு மொழி பேசும் வழிகாட்டியாகவும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிரஞ்சு மொழி கற்பிக்கும் கௌரவ விரைவாகவும் மற்றும் செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராகவும் இருந்து வருகிறேன். 

 

பிரஞ்சு ஜெர்மன் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நமது மாவட்டத்தில் சிறப்பை விளக்கும் போது அதனைப் வெளிநாட்டினர் எளிதாகவும் மகிழ்ச்சியுடன் புரிந்து கொண்டனர். இது நமக்குப் பெருமையாக இருக்கிறது. பிரஞ்ச் மொழி பேசும் சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வருவதே இவ்விருதினை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

 

இது மட்டுமல்லாமல் இவர் கற்ற மொழியினை ஆறு வயது குழந்தையாக இருந்தாலும் சரி 60 வயது முதியவராக இருந்தாலும் சரி நமது கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் ஆர்வம் கொண்டவர் திரு. மணிகண்டன் அவர்களால் பல மாணவர்கள் அனைத்து மொழியினையும் கற்றுக் கொண்டனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறந்து விலகிக் கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )