காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது பார்க்கும் இடமாக செயல்பட்டு இருந்து வந்தன.

இந்த இடத்திதை 2007 ஆண்டு கருமாந்த கவுண்டர் என்கின்ற சின்னசாமி என்பவரிடம் பதினாங்கு வருட ஒப்பந்த அடிப்படையில் இடத்தை எழுதி வாங்கிகொண்டு இடத்தில் கட்டிடம் கட்டி சிவராஜ் என்பவர் தொழில் செய்து வந்தார்.பின்னர் இந்த இடத்தை சின்னச்சாமியின் தம்பி மகனான மயில்சாமி என்பவர் இடத்தை விலைக்கு வாங்கப்பட்டார். அதன் அதன் அடிப்படையில் மயில்சாமி தனது இடத்தை ஆறுச்சாமியை காலி செய்ய வலியுறுத்தினார்.

பின்னர் அந்த இடத்தை காலி செய்யப்படாததால் நேற்று முன்தினம் 30க்கு மேற்பட்ட அடி ஆட்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து தொழில் செய்யும் இடத்தை தரைமட்டமாக ஈடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சிவராஜ் செய்தியாளர்களிடம் கூறிய போது கடந்த 2007 ஆம் ஆண்டு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் பேசி அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தொழில் செய்து வந்த நிலையில் அன்று முதல் தொழில் சிறப்பான நிலையில் இருந்தன.

பின்னர் கொரோனா காலத்தில் இரண்டு வருட தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் பெரும் சிரமப்பட்டு வந்த போது ஒப்பந்த காலம் முடிவுற்ற நிலையில் இடத்தை வாங்கிய மயில்சாமி உடனடியாக இடத்தை காலி செய்யச் சொல்லி வலியுறுத்தியதாகவும், மேலும் இதனை நீதிமன்றத்திற்கு சென்று போதிய கால அகவாசம் வேண்டும் வழக்கு தொடர்ந்துள்ளதாக்கவும்,
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் சுமார் பத்து மணி அளவில் ஜேசிபி இயந்திரம் மற்றும் 20 க்கு மேற்பட்டவர்களுடன் மயில்சாமி மற்றும் அவருடைய மனைவி மற்றும் மாமனார் உட்பட்டோர் இடத்திற்கு வந்து கார் கண்ணாடி, கட்டிடம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பறவைகள் மற்றும் லாரியின் உதிரி பாகங்கள் உட்பட சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கள தவறும் பட்சத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக இதன் மூலம் தெரிவித்தார்.
