கள்ளத்தனமாக மதுவிற்ற பார் உரிமையாளர் கைது

செய்தியாளர் கொ. விஜய்.
மிலாடி நபி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் செயல்படும் அனைத்து மதுபான கடை மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது,
இதனிடையே கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் இயங்கும் அரசு மதுபான கடை அருகிலுள்ள பாரில் தமிழக அரசின் உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவியா, கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பாரில் நேரில் ஆய்வு செய்தபோது அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்களையும்,
அரசு அனுமதி மீறி மது விற்பனை செய்த பாரின் உரிமையாளர் ராஜா என்பவரையும் கையும் களவுமாக கைது செய்து பாரின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
CATEGORIES கடலூர்
