BREAKING NEWS

19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,

இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர் எனவே ஈரப்பதளவை 22 சதவீதமாக உயர்த்தி தர கோரிக்கை வைத்துத்தனர்.

 

 

இதை அடுத்து மத்திய குழுவினர் கடந்த 22ஆம் தேதி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த நிலையில் ஈரப்பத அளவை 19 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரப்பத தளர்வை 22 சதவிகிதம் கேட்ட விவசாயிகளுக்கு வெறும் 19 சதவீத அறிவிப்பு என்பது ஈரம் இல்லாத அறிவிப்பு என வேதனை தெரிவித்துள்ளனர்.

 

நவீன காலத்தில் மழையில் அளவைப் பொறுத்து ஈர பதத்தில் தளர்வு வழங்கும் நிரந்தர தீர்வை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )