திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஜெயந்திநாதர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். பின்னர் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் வைத்து ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஜெயந்திநாதர் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி ஸ்ரீ பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
மாலையில் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதற்காக கோவில் வெளி பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க18- இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் 3 ட்ரோன் கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப் படுவார்கள். 66 இடங்களில் குடிநீர் வசதி, 320 இடங்களில் கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளது.19 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுமார் 3 ஆயிரம்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருச்செந்தூர்-திருநெல்வேலி, திருநெல்வேலி திருச்செந்தூர் என இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.