தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும்!
கிராம சபை கூட்டம் போல் 300 பகுதிகளில் வார்டுகுழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும்!
மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொது மக்கள் பங்கேற்கவும், கிராம பஞ்சாயத்துகளில், கிராமசபை கூட்டம் நடைபெறுவதுபோல், நகராட்சி, மாநகராட்சிகளில் பகுதி சபை கூட்டம் நடத்தல்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து,
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நாளை முதல் நடைபெறும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். இந்த பகுதி சபை கூட்டம் 60 வார்டுகளளில் 300 பகுதிகளில் நடைபெறும் என்றார்.
மேலும், பகுதி சபை கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் அந்தந்த பகுதி தலைவர்கள் பெற்று, வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்படைப்பனர் என்றார்.
அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானத்தை ஆமோதித்தனர்.