BREAKING NEWS

முத்துராஜ் தேனி செய்தியாளர்.

 

மக்கள் பணி செய்ய விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படும் காரணத்தால் சுருளி பட்டியை சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர்கள் உட்பட 11வார்டு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு

 

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளி பட்டி ஊராட்சி 12-வார்டுகள் உள்ளது.

 

 

இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக நாகமணியும், துணைத்தலைவராக ஜெயந்திமாலாவும்,

1 வது வார்டு உறுப்பினராக அறிவு, 2வது வார்டு உறுப்பினராக சிவானந்தி,

4 வது வார்டு உறுப்பினராக சாந்தி, 5வது வார்டு உறுப்பினராக ராதிகா, 6வது வார்டு உறுப்பினராக சுதா, 7வது வார்டு உறுப்பினராக முத்துக்குமார்,

8வது வார்டு உறுப்பினராக ராஜலட்சுமி,

9 வது வார்டு உறுப்பினராக மணிகண்டன்,

10 வது வார்டு உறுப்பினராக கண்ணையன்,

11 வது வார்டு உறுப்பினராக சதீஷ்குமார்,

12வது வார்டு உறுப்பினராக பொம்முராஜ் ஆகியோர் உள்ளனர்.

 

இந்த நிலையில் இவர்கள் பதினொரு வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

 

அப்போது கடந்த ஏழு மாதங்களாக மன்ற உறுப்பினர்கள் கூட்டம், நிதி முறைகேடு உள்ளிட்ட புகார்களை பலமுறை தேனி ஆட்சியரிடம் நேரில் சந்தித்து புகார் கூறியும்,

 

உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இதனால் மன உலைச்சலான மேற்கண்ட வார்டு உறுப்பினர்கள் இன்று ராஜினாமா கடிதத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )