தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.

தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.
இரவு கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க தொடங்கின அதில் கடையில் உள்பகுதியில் வைத்திருந்த பூஜை பொருள்கள் கொலு பொம்மைகள் என அனைத்தும் தீயில் இருந்து சேதமாகின. அப்பகுதியில் மற்றோர் கடைக்கு சரக்குகளை மதுரையில் இருந்து ஏற்றி வந்த லோடு மேன்கள் பார்த்து உடனடியாக மத்திய பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பிறகு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தீயை முழுமையாக அனைத்து பெரும் சேதம் என்பதை தவிர்க்கப்பட்டது இதில் கடையில் உள்ள பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பூஜை பொருட்கள் மொத்தமும் தீயில் இருந்து நாசமாகின.
இதுகுறித்து மத்தியபக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
