BREAKING NEWS

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார்.

 

ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லக்குட்டி வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு குத்தாலம் ஒன்றிய குழுத்தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமிமுத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன் மற்றும் வீடுகள்(ம)சுகாதாரம் உதவி திட்ட அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் கிராம சபை கூட்டத்தில் பேசியதாவது, தற்பொழுது வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி என அனைத்து வரிகளும் இணையவழி மூலம் செலுத்திக் கொள்ளலாம். உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்து கொண்டால் நீங்கள் எப்பொழுது வரிகளை செலுத்த வேண்டும் என்பதை குறுஞ்செய்தி மூலம் உங்கள் அலைபேசிக்கு வந்துவிடும் அவற்றின் மூலம் நீங்கள் எளிமையாக வரிகளை கட்டிக் கொள்ளலாம்.

 

அதனைத் தொடர்ந்து குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் சரி செய்து வருகின்றோம். அதனை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சாலை பணிகள், குளங்களை தூர்வாருதல், மரக்கன்று நடுதல், கட்டிட சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு கொண்டு வருகின்றது.

 

அரசு அலுவலர்கள் மழை, வெள்ளம் காலங்களில் கூட பொதுமக்களின் நலனுக்காக பணிகளை செம்மையாக செய்து வருகின்றனர். பொதுமக்கள் அரசின் திட்டங்களை அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகளையும் ஊராட்சி செயலர் உத்திராபதி பொதுமக்களிடம் படித்து விளக்கம் அளித்தார்.

 

 

அப்போது உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், வார்டு உறுப்பினர்கள்‌ அனைத்து துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இறுதியில் ஊராட்சி செயலர் உத்திராபதி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )